News

என் இனிய உறவுகளே,

தமிழ் நாட்டிலிருந்து உங்கள் அனைவரையும் மற்றுமொருமுறை சந்திப்பதில் மகிழ்ச்சி.

வருடாவருடம் தமிழ்நாட்டுக்கு மார்கழி மாதத்தில் நடைபெறும்  இசை விழாவையொட்டி வருவதோடு என் இஷ்ட தெய்வங்களின் ஸ்தலங்களையும் வணங்குவதுண்டு. அப்படி வணங்கும் போது என் உறவினர்,நண்பர்களுக்காக மட்டும் வேண்டுவதல்லாமல் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கும் உதவும்படி வேண்டுவதுண்டு. இரண்டு வருடங்களாக ‘கொவிட்’ காரணமாக வரமுடியாத நிலைமையில்   இம்முறை திருச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையாரையும் சென்று வணங்கினேன்.
பிள்ளையாரின்  அருள் கிடைத்ததுபோல், ஒரு நண்பர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஒரு தொகையை தந்து உதவினார். வேர்ஜினியா -அமெரிக்கா – மாகாணத்தில் வாழும் ஒரு பரோபகாரர் Dr. ரஞ்சிதன் ரூ. 367,850. அனுப்பிய பணம்  காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து நன்றிக்கடிதம்  கிடைக்கப்பட்டது. டாக்டர்  ரஞ்சிதன் முன்பும் எமது அமைப்புக்கு உதவியது குறிப்பிடத்தக்கது . ( கடிதம் கீழே )
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உதவ விரும்புவோர் HELPWORA மூலமாகவோ அல்லது அந்த அமைப்புக்கு நேரடியாகவோ உதவலாம். பாதிக்கப்பட்டோருக்கு செய்யும் உதவி தெய்வத்துக்கு செய்யும் சமானமாகும் .( Serving the humanity is serving the God.)
நன்றியுடன்,
விக்டர் ராஜலிங்கம்.      

——————————————————————————————————————————————————————————————————

 

காணாமல் ஆக்கப்பட்ட  தமிழ் மக்களுக்கான போராட்டம்

 

உங்கள் போராட்டத்துக்கு ஒரு நீதி கிடைக்க எமது வாழ்த்துக்கள்  
                                                         ஹெல்ப்வோரா

 


The Association for relatives of the enforced dissappearences is organizing a rally in Kilinochi on
August 12th, 2022 to commomorate their struggle for Justice for the last 2000 days. This time they plan
to invoke the attention of the international community for their involvement and assistance.
They have appealed to Helpwora for our assistance to help them in their struggle.
Helpwora decided to provide some help and we have sent, with the assistance of few Tamil activists,
SL Rs.200,000 for the following purposes.
1- To provide food and beverages for the volunteers participating in the rally.
2- To share the travel expenses for the leaders to go to Geneva to appeal for their support.( funds collected)
3- To provide funeral expenses as and when the elderly mothers embrace death while waiting to see their
loved ones.( The association had appealed for assistance for this purpose as well.)
We sincerely thank all those who have magnanimously contributed towards our humanitarian project.மதிப்புக்குரிய கலா அம்மா, லீலாதேவி அம்மா, ஜெனிதா அம்மா மற்றும் சகல அன்னையருக்கும்.வணக்கம் பல, உங்களின் எதிர்வரும் கவனஈர்ப்பு போராட்டத்துக்கான அறிவித்தல்களுக்கு நன்றி.
நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ‘ஹெல்ப் வோரா’ இலங்கைவங்கி மூலமாக ரூ.200,000
அனுப்பியுள்ளோம். இந்தப் பணத்தை உங்களின் எதிர்வரும் போராட்டத்துக்கும், உங்களின் அடுத்த
ஐநா ஜெனிவா பயணத்துக்கும்( ஏற்கனவே இதற்காக சில அன்பர்கள் எமக்கு பணம் அனுப்பியுள்ளார்கள்)
மற்றும் வசதியற்ற தாய்மாரின் எதிர்பாராத மரணங்களால் ஏற்படும் இறுதிச் செலவுகளுக்கும் பாவிக்கலாம்.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் பலரின் உதவிகளுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த சமயத்தில் உங்களின் இந்த அவல நிலைக்கு முக்கிய காரணகர்த்தாவான காதகன் கோத்தபாய
இன்று பதவி இழந்து நாடு நாடாக இருக்க இடமின்றி அலைவதை பார்க்கும்போது ‘அரசனும் ஆண்டியாவான்’
‘ தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழிகள் ஞாபகத்திற்கு வருகின்றன. எது எப்படி இருந்தாலும் உங்கள்
அனைவருக்கும் இந்த முறையாவது ஒரு விடிவு கிடைக்க இறைவன் அருளையும் ஆசியையும் வேண்டுகிறோம்.
அன்புடன்
விக்டர் ராஜலிங்கம்.

 


 

 

இலங்கை அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

ஐநா மனித உரிமை அலுவலகத்தை நாடுகிறார்கள்.

E-MAIL: ARED.KILINOCHI@GMAIL.COM
20.02.2022
Ms.Michelle Bachellet Jeria
High Commissioner
OHRC , Geneva.
Our continuous struggle for tracing our brethren going for 5 years, and still
continuing.
We, the relatives of victims of enforced disappearances in the North- East, commenced our struggle for tracing our brethren on 20.02.2017 at the grounds of Kandasamy Temple, Kilinochchi (that is, this same venue). Our struggle continues for the 6th year now. With the conclusion of the final battles, over 20000 became victims of enforced disappearances following their surrender before being taken away for investigations or following they’re being handed over by relatives. Besides this, there were more victims of enforced disappearances within army-controlled areas where they were either abducted in white vans or abducted by armed groups operating with the army. Our struggle to trace them continues despite the passing away of over a hundred parents who took ill longing for their relatives separated from them. This struggle will continue until justice is done or until the last of us is alive. Their deaths have eliminated witnesses to victims made to disappear and evidence too. If this tragedy persists it would be easy for the Singhalese government to close the chapter on victims of enforced disappearances citing lack of evidence.
Sri Lanka government is stating to the international community that a solution would be
found, internally. But we will receive no justice from the Sri Lanka government. Habeas
Corpus applications of some relatives have been pending for years with some cases being finally dropped on the basis that the registration number of the bus in which surrenders were led away was not provided by the applicant. Will not a person fleeing for life in a war situation cry and moan separation from husband or child? Or, will they be looking for a pen and paper? Would they have been in such a state of mind? How the judiciary in Sri Lanka  discriminates is clear from this. ( please see below)

——————————————————————————————————————

Helpwora continues to provide relief assistance as they do not receive any assistance from the Sri Lankan Government. Helpwora thanks the philanthropists in our Diaspora community for their magnanimous donations. Our donations were disbursed to the mothers and women.

Helpwora.com

 

 

 


July 2021

Helpwora reaches out to the Covid19 affected people.
Helpwora provided relief assistance to the people, who are in dire need of help, affected  with covid 19 epidemic in Northern Province of Sri Lanka.
‘ஹெல்ப் வோரா’  கொரோனவினால் பாதிப்புக்குள்ளாகி துயரப்படும் வடமாகாணத்துக்கு மக்களில் சிலருக்கு உதவி வழங்கி வைத்தது.

 


June 2021

Recently Mr.Wigneswaran made a request to the diaspora Tamils to help the people in  Northern province who are locked down due to coronavirus.
HELPWORA, with the help of its supporters, made some relief assistance.
Please see the information below.
Helpwora is ethically obliged to the donors who had  magnanimously contributed to this donation.
    • Dr. M. Maheswaran. London. UK. Sterling pounds. 500. ( made directly )
    • Dr. N. Ranjithan Maryland, USA US  $500.
    • Dr. Pon. Thangarajah California US  $200.
    • N.Nagulendran Cumberland. US 1$00.
    • T.Sriskantharajah Melbourne. AUS Austral. $ 200
    • N. Murugathasan  Melbourne. AUS Austral. $100
    • Thambi Nada Melbourne. AUS Austral.  $100
    • Anonymous Melbourne. AUS Austral. $50
    • Sivasamboo Sridas Toronto Canada Cana – $ 100.
    • Kala Ranjith Kumar Toronto Canada Cana -$ 50
    • Anonymous Toronto Canada Cana -$ 50
    • Anonymous Sydney AUS Aus $ 50

    ——— Forwarded message ———
    From: CV Wigneswaran <cv.wigneswaran@gmail.com>
    Date: Sat, Jun 26, 2021 at 3:41 AM
    Subject: Re: E-receipt for Transaction Third Party – BOC Accounts 179647145008588
    To: Victor Rajalingam <4victorraja@gmail.com>
    Received with thanks Rs.100000/- into Trust account No.0085608699 . Lockdown in progress.
    Staff unable to attend office.Shall send official acknowledgement soon. Regards. W
    cvw office
    AttachmentsJul 3, 2021, 2:23 AM (1 day ago)

    Dear Sir!
    Herewith I am sending the official receipt for your donation please.
    Thank you
    Kind regards ( please see receipt below.)
    C.Geetha
    _________________________________________________________________

    என் அன்பு உறவுகளே,
    இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சில குறிப்புகளை கூற கடமைப்பட்டுள்ளேன்.
    சில வருடங்களுக்கு முன் வெளிநாடு வாழ் தமிழர்கள் சிலர் தமிழர் போராட்டதுக்கும்,
    தமிழருக்கு மனிதாபிமான உதவிகளுக்கென்றும் பணம் திரட்டி அப் பணம் பெரும்பாலும்
    வெளிநாடுகளிலேயே காணிகளும், வீடுகளும், பலசரக்கு கடைகளும்,ஹோட்டல்களும்
    என இங்கேயே தங்கிவிட்டதை பலரும் அறிவர். இந்த நிலைமையில் இப்போது தாயகத்து
    எம் மக்கள் உண்மையில் கொரோனாவினால் கஷ்டப்படுவதை அறிந்தும் எம்மில் பலர்
    உதவிகள் செய்ய தயங்குவதை நாம் குறை கூறுவதற்கில்லை.
    திரு விக்னேஸ்வரன் ஒரு நீதியரசராக இளைப்பாறிவிட்டு ஓய்வெடுக்காது, தமிழர் படும்
    பலதரப்பட்ட துன்பங்களுக்கு தன்னால் ஏதாவது செய்யமுடியுமா என்ற ஆதங்கத்தில்
    அரசியலிலும் மனிதாபிமான சேவையிலும் ஈடுபட்டுள்ளார். இலங்கை பாராளுமன்றத்துக்கு
    பதவிகளுக்கும் சுய லாபங்களுக்கும் செல்லும் ஒரு சில அரசியல்வாதிகள் மத்தியில்
    தமிழர் பிரச்சனைகளையும் உரிமைகளையும் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் ஒரு
    வல்லுனராக திகழ்கிறார். தமிழர்கள்தான் இலங்கையின் பூர்வீக மக்கள் – சிங்களவர்கள்
    வந்தேறு குடிகள் என்பதை ஆதார பூர்வமாக எடுத்துரைத்து தமிழரின் குனிந்த தலையை
    நிமிரவைப்பதை யாரும் மறுக்க முடியாது.
    இதில் வேதனை கலந்த ஆச்சரியம் என்னவென்றால் வெளிநாட்டில் வாழும் சில படித்த
    பண்புள்ள சில ‘பெரியோர்கள்’ அவரின் சேவையை எள்ளி நகையாடி குறை கூறுவதுதான்.
    ஆனால் அவரோ ‘போற்றுவார் போற்றுதலும் தூற்றுவார் தூற்றுதலும் போகட்டும் இந்த
    விக்னேஸ்வரனுக்கே’! என்று புறம்தள்ளி விட்டு தமிழ் மக்களுக்கு தன் சேவைகளை தொடர்ந்து
    செய்கின்றார். அவரின் தன்னலமற்ற , பாதிக்கப்பட்ட தமிழரின் சேவைகளுக்கு நானும்
    என்னாலான உதவிகளையும் ஆதரவையும் தொடர்ந்து செய்ய உங்கள் அனைவரின்
    அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.நன்றி
    அன்புடன்
    விக்டர் ராஜலிங்கம்.

           


    May 2021


    To mark an important anniversary, Helpwora donated the following relief assistance.
    Mothers who lost their loved ones due to enforced disappearance during the war by the Sri Lankan were given following Gifts of money and food.
      
    50 women affected by the war who Rs 5000 and one Saree each with food for the day.
    Inmates in the old age home were given food.
          
          
    Children in four orphanage centers are in need of help in Killinoichi, were given food for the day.
    We wish that all those who are comfortably living in diaspora countries should think of the needy people in your homelands too, when celebrating important functions in your family. Serving humanity is serving the God.

    August 2020

    In Sri Lanka – parliamentary elections were held in August 2020 and in the Tamil areas had more than five political parties contested. Mr. Wigneswaran,one of our patrons, too contested. He appealed to the Diaspora Tamils to help him financially to meet his election expenses. Helpwora, among other donors, toodonated Rs. 100,000. with the expectation that he, if elected, will make use of his good office to solve the problems of the relatives of the enforced disappearances.
    We are glad to inform that he was elected and we wish him all success in helping the Tamils in our homeland, who are in need of his help. 
    From: CV Wigneswaran <cv.wigneswaran@gmail.com>
    Date: Fri, Jul 17, 2020 at 3:18 AM
    Subject: Re: – JUSTICE WIGNESWARAN – தேர்தல் செலவுகளுக்கு கைகொடுக்குமாறு தமிழ் மக்களிடம் விக்னேஸ்வரன் வேண்டுகோள்
    To: Victor Rajalingam <4victorraja@gmail.com>
    Received by Cheque Rs.100000/- Official receipt would be sent on realisation of cheque.While we are committed to help Widows and others the money given by you would be spent on Election Campaign expenses including paper advertisements. You have been a long standing supporter of ours. Thank you. Regards. W

    Date: Sun, Sep 6, 2020 at 10:29 PM
    Subject: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மக்களை விடுவிக்கக் கோரும், நீதிக்கான நெடும் நடைபயணம், மார்க்கம் நகரில் உள்ள வன்னி வீதியிலிருந்து காலை பத்தரைக்கு ஆரம்பமாகி மார்க்கம் அண்ட் ஸ்டில்ஸ் சந்தியை நோக்கி நகர்ந்து செல்கின்றது.( Canada news )

    Mothers, widows and children continue to protest in Sri Lanka for the last 1000 days, in search of their loved ones.
    In the final days of 2009 war, the surrendered captives were taken in buses and never heard of, until today,  their fate.
    These unfortunate dependents still have hope that they will see their loved ones one day.
    But recently, Sarath Fonseka, the Army commander in charge of the war,informed that all those who surrendered were shot to death on the orders of then Defense Minister Gotabaya, who is contesting now for the president of Sri Lanka.
    Government offered, after series of protests both in Sri Lanka and in western countries, Rs.6000. ( per victim ) on the condition that they should stop staging protest meetings.
    Government further said that they will issue death certificates for all those who surrendered. ??????
    As informed earlier, we of the HELPWORA decided to offer some relief assistance through their coordinator, Mrs. Leeladevi ( please see video below ) whom we met at UNHRC Geneva, to share with the mothers and women who are in dire need of livelihood. Last week we sent Rs.100,000 ( in addition to the Rs.100,000 sent earlier ) We hope to send third installment in December this year.
    These donations were made possible with the generosity of kind donors like you. No amount is small amount – Rs.10. or $10 –
    more than welcome.
    Anbudan
    Helpwora.com

    இலங்கையில் எமது தாயகத்தில் 2009ம் ஆண்டு போருக்குப்பின் துன்பப்படும் மக்களில் காணாமற் போனோரின்
    ( வெள்ளைக்கொடியுடன் வந்து ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் உட்பட ) உறவுகள் இன்னும்
    துன்பப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.
    ( தயவு செய்து கீழ் காணும் காணொளியை பார்க்கவும் )
    தங்கள் உறவுகள் திரும்பவும் கிடைப்பார்களா என்ற ஏக்கம் ஒருபுறம் – அவர்களின் குடும்பத்தலைவர்கள் இல்லாமல்
    வாழ்வாதாரமற்று அல்லல்படுவோர் இன்னொருபுறம். இவர்களை  இலங்கை அரசாங்கம் கண்டுகொள்ளாதது
    யாவரும் அறிந்ததே.! ஆனால் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது அரசியல்வாதிகள் அரசாங்கத்திடம் இவர்கள்
    பிரச்சனைகளை கொண்டு செல்வதாகவும் தெரியவில்லை. சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள்
    தமிழரசுக்கட்சி அலுவலகத்தை ,கோரிக்கைகள் கொண்ட பாதகைகளோடு, முற்றுகையிட்டும் எவரும் கண்டுகொள்ளவில்லை.
    இலங்கைக்கு சென்று ‘ இப்போ நாடு செழிப்பாக இருக்கிறது அங்கு குறை எதுவும் இல்லை ‘ என்று புலம்புவோரும்
    கண்டுகொள்வதுமில்லை.
    இந்த நிலைமையில், பாதிக்கப்பட்டோர்  யாவரும் கைவிட்ட நிலமையில், ஐ நாவிடமாவது முறியிட்டுப்பார்ப்போம்
    என முடிவெடுத்து அவர்களுக்குள் ஓர் தலைவியை தெரிவு செய்து, யாரோ ஒரு ‘நல்ல உள்ளம் ‘ பிரயாணச்செலவை
    பொறுப்பெடுக்க திருமதி லீலாதேவி ஆனந்தன்  என்பவர் ஐநா – ஜெனீவா மனிதவுரிமை மையத்துக்கு வந்திருந்தார்.
    புலம் பெயர் அமைப்புக்கள் ( நாடு கடந்த அரசாங்கம் உட்பட ) இலங்கையிலிருந்து வந்த  தமிழ் அரசியல்வாதிகள்
    இலங்கைக்கு மேலும் மேலும் கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்று வாதாட, திரு சுமந்திரனும்  பிதா. இமானுவேல்
    அடிகளாரும் இலங்கை மேலும் இரண்டு வருடங்கள் அவகாசம்  பெற ஆதரவளித்தனர்.
    இவர்களுக்குள், திருமதி லீலாவதி தன்னந்தனியாக காணாமற்போனோரின் துன்பங்களை நெஞ்சுருகும்
    வண்ணம் எடுத்துரைத்தது யாவரையும் ஈர்க்கப்பண்ணியது.
    லீலாவதி அம்மையாரை எமது அமைப்பு சார்பாக நாடு கடந்த அரசாங்கம் அனுசரணையுடன் சந்தித்து உரையாடினோம்.
    அவருக்கு அப்போதைய செலவுக்கு ஒரு சிறு அன்பளிப்பு கொடுத்ததோடு அவர் தாயகம்  திரும்பியதும் ரூ.100,000. கொடுத்தோம்.
    வாழ்வாதாரம் அற்றோருக்கு சிறு தொகையாக பிரித்து கொடுப்பதோடு அவர்களின்  தகவல்கள் கிடைத்ததும் ,
    மேலும் உதவித்தொகை அனுப்புவதாக இருக்கிறோம் . 

    ( திருமதி லீலாதேவி ஆனந்தன் ஐநா பேச்சரங்கில் )

    என்னோடு சேர்ந்துகொண்டவர் – நாடு கடந்த அரசின் தற்போதைய உப அவைத்தலைவர் திருமதி ரஜனிதேவி ( ஜெனீவா ).
    எமது இந்த உதவிகளை நாடு கடந்த தமிழ் ஈழ அரசின்  மனிதாபிமான செயல்களில் ஒன்று என்பதை தெரியப்படுத்தவே இவற்றை அறிவிக்கிறேன்.
    வணக்கத்துடன்.
    விக்டர் ராஜலிங்கம்
    காணாமற்போனோரின் உறவுகளின் தொடரும் துன்பங்களை விளக்கும் காணொளி. 

    • Sri Lankan war widows selling kidneys to pay for loans -please share & write comments to this article;